கையறுநிலை கவிதை-2
ஒரு பறவையின் தாகம் தீர்த்தல்
அலைந்து திரியும் தவிப்பை போல் தகிப்பை போல்
நானும் அலைந்து திரியக்கூடும்
பறத்தலின் தாகத்தை
ஒரு துளி நீர் தீர்க்க
ஒரு துளிப்பானை நீர் கிடைக்காமல் போகலாம்
நீரின்றி அமையாது உலகில் தண்ணீருக்காக அலைந்து திரியும்
பறவைகள் போல் மனிதர்கள் பறக்கநேரிடும்
சிற்றெறுமின் நாவறண்டு
சிந்திய நீரைப் பருக
ஒவ்வொரு வீடாய் அலைவுறும்
நீரின் தடம் தேடி வற்றிய ஓடையில் தேத்தாங்காயொடு அலைகிறார்கள்
நீர் நாடோடிகள்
சிறுகுழந்தையின் தாகத்தைத் தீர்ப்பதற்கும்
இறப்பின் விளிம்பில் உயிர் துடிக்கும் வயோதிகருக்கும்
பாறைகளுக்கு நடுவே உறைந்த
நீரே ஊற்றெடு.
கருநா
No comments:
Post a Comment