கையறுநிலை கவிதை-1
இலை உதிர்வில் பூ உதிர்வில் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது
உன் பிரிதலை போல
என் சாளரங்களில்
காற்றின்றி மூச்சு திணறல்
நீ இல்லாத உலகில்
உதட்டின் ஈரம் சுவைத்துத் தீண்டத் தீண்ட
ஒரு கனியைப் பருகுவதைப்போல்
பரிசம் கொள்கிறது
என் உடல்
மழையின்றி வறண்ட கானகத்தில் நீ இல்லாத வெட்டவெளியில்
தனித்தலைகிறது என் வானம்
அண்ட சராசரத்திற்கு அப்பால்
மௌனமாக மண்ணில் புதைந்தன எழுதப்படாத இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
நீயும் நானும் நாமாகிய நினைவுகள் மக்கிய சடலங்களாய்
எலும்புகள் மஜ்ஜையற்று
உருவமற்று கிடக்கின்றன
தோண்டப்படாமல் புதையுண்ட
முதுமக்கள் தாழி போல.
கருநா
No comments:
Post a Comment