Saturday, 14 July 2018

நீ ஆடிய கூத்து

            நீ ஆடிய கூத்து

கண்ணாடியில் என்றேனும்
சிதறுவதில்லை வேடதாரி மனசு

கூத்து அரங்கேறி முடிந்தவுடன்
களைக்கப்படும் ராஜமுகம்
எப்போதும் நிலைத்திருப்பதில்லை
பழம்பெருமை பேசி
நகர்கிறது  கூத்து வாழ்க்கை

சாரட்டு வண்டியின் அதிர்வொலி
கானகமெங்கும் ஒலிக்க
வெண்பட்சிகளின் வெளியை
கானம் கொண்டு விரட்டிய
கதர்ச்சொக்காய்க்குள் கருநிறக்கோட்டுக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது எதிர்க்கதையாடல்

வெண் மேகங்களின் காமம்
நகக்கணுக்களில் ஊடுருவி
ஒலித்துகொண்டிருக்கிறது
எல்லோருக்குள்ளும்.

மீட்க முடியாத பொழுதுகளில்
நினைவில் நீள்கிறது
திசை மாறும் பறவைகளாய்
நீ ஆடிய கூத்து.
        _  சு. ம.கருநா
                

No comments:

Post a Comment