Thursday, 19 July 2018

கவிதை

ஆவியாதல் = மனித வாழ்வு
_________________________________
குறிஞ்சிப் பெருமலையை குடைந்து
கிரகங்களின் ஆராய்ச்சி,
மலையை அழித்து தாது எடுப்பு,
விஷ்பரூபம் கொள்ளும்
உம் ஒப்பனையைக் களைக்க
வெகு காலம் இல்லை.

உயிர்களைக்காவு வாங்க
ஸ்டெரிலைட் ஆலை,
ஹைட்ரோ கார்பன் திட்டம்.
நோயுற்ற மனிதர் வாழ
உலக சந்தை  மருந்துகள்.

போலிப்பச்சையத்தை நம்பி
ரசாயணத்தெளிப்பில்
மண்ணின் சுயம் அழிந்து
வறண்டு போனது பூமி
நோய் உற்ற மனிதராய்.

மிச்சமிருந்த வேளாண் அழிக்க
பல ரூபங்களில்  திட்டம்.
வேளாண்மையில் முதலீடு செய்ய
பல விற்பன்னர்கள் கூவியும் கூட்டம்.

நீரின்றி அமையாது உலகு என அறிந்தே நீரை விற்பனையாக்க
ஆழ்குழாய் கிணறுகள்.
நல் நீரை உறிஞ்சி விட்டு
கடல்நீரை நன்னீராக்கும் உம் திட்டம்

அணுவை த் துளைத்து
ஏழ் கடலில் புகட்ட கூடங்குளம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை தாராளமயம் ஆக்கினாய்,

யாவும் உலகெலாம் என்பதை
உலகமயம் ஆக்கினாய்,

உணவே மருந்து மருந்தே உணவு  முன்னோரின் வாக்கினை 
கையில் எடுத்துவிட்டாய்,

வேளாண் ஆதிப்புள்ளி அறனழித்து
நில ஆர்ஜிதம் செய்கிறாய்,
பூட்சொரிந்த இடத்தில்
தார் சொரிய செய்தாய்,
நீ அமைக்கும் சாலைக்கு நடுவே
அரளி  நட்டாய்
அது எங்கள் பிணங்களின்
கண்ணீர் அஞ்சலிக்காகவா ?
நாங்கள் பட்டமரதை சேர்த்துவைப்பதில்லை
இனி சேர்த்துவைப்போம்
உம்மைப் பாடைகட்டி எரிப்பதற்காக.

தோட்டக் களால் உயிர் வாங்கும்
பச்சோந்திகளைத்
தோலுரி.
வளங்களை வேட்டையாடும்
நவீனத் தூரோணர்களைக்   கட்டவிழ்.

காற்றோடும்நீரோடும் மண்ணோடும் தீயோடும்
நெய்தல் நிலப்பெருமணலோடும்
சிதிலமடைந்த வாழ்விற்கு
எங்கள் சடலங்களே
சாட்சியமாக இருந்தன.

மலை காடு வயல் கடல் என
நானில மக்களைப்
புழுவாக நினைத்ததோ
உம் அதிகாரம்.
                - சு.ம.கருநா

No comments:

Post a Comment