Wednesday, 23 March 2016

இயந்திரக்காமத்தின் ருசி

குறிஞ்சிப்பெருமலைக்குடைந்து
கிரகங்களின் ஆராய்ச்சி.   
போலிப்பச்சையத்தை நம்பி
ரசாயணத்தெளிப்பில்
மண்ணின் சுயம் அழிந்து
வறண்டு போனது பூமி
முகநூலில் இல்லாத நபரின் முகவரியாய்.
காற்றோடு நீரோடும் நெய்தல் நிலப்பெருமணலோடும்
கலந்த அணுக்களால்
சிதிலமடைந்த கடலுக்கு
கரையொதிங்கிய மீன்களின் சடலங்கள்
சாட்சியமாக இருந்தன.
மலை காடு வயல் கடல் என
நானிலம் கடந்து
புதுப்பாலை நிலத்தாய்க்கும் 
தொழில் நுட்பத்தந்தைக்கும்
புழுவாகப் பிறந்தான் மனிதன்.
மதுப்பாட்டிலில் இருந்த துளிகளை அருந்தி
நிலைதடுமாறும் மனதில் நிறைந்திருக்கிறது
மக்காத குப்பையைப்போல 
இயந்திரக்காமத்தின் ருசி


No comments:

Post a Comment