Wednesday, 23 March 2016

காருண்யம்

பனித்துளிவிழுந்து
பச்சிலையில் உறங்கும் நள்ளிரவில்
மதில்மீதுஅமர்ந்துகொள்கின்றன
ஊர்காதுகள்
வெயில் திண்ணும் நிழல் போல்
அலர்தூற்றும் நாவுகள்
எவருக்கும் கட்டுப்படாது
அலைந்துதிரியும்
ஊர்ந்துசெல்லும் எறும்புகள்
மிதிபடும் தருணத்தில்
கால்களில் விழியிருந்தும்
காருண்யம் பார்ப்பதில்லை.

No comments:

Post a Comment