நீரிற்குச் சிறகு முளைத்துவானோக்கிப் பறக்க
மணற்கற்கள் வெயிலைத்தின்று
வெம்மையை வெளியேற்றுகின்றன.
வரிநிழலில் துயில் கொள்ள
நட்டபாடை இசை மீட்டி வருகிறாள்
புலமைப் பொண்ணொருத்தி.
கறக்கும்பாலை கன்று உண்ணா
இழுத்துச் செல்லும் பசுமாட்டுக்காரன் போல
இக்கால மன்னர்கள் எத்திசைக்காரர்களுக்கும் ஈவதில்லை.
தூசுபடிந்த நெசவுத்தறி போர்வை நெய்ய
பேகனைப் பார்த்து
குறிஞ்சி மயில் கூட்டம் அகவுகிறது.
பாரியைப் பார்த்து முல்லை நில
வாடிய தாவரங்கள்
பல கேள்விகள் கேட்கின்றன
எழுவர் தந்த பரிசில்கள் காலாவதியாகிவிட்டது
விலையில்லாப் பொருள்வாங்கி
விலை கொடுத்துப் பருகிறோம்.
பதிலி பணம் பெறும் சூட்சுமத்தை
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் வயோதியர்கள்
புரிந்து கொள்ள முடிவில்லா யுத்தத்தில்
பஞ்சம் நின்ற உடல்கள்
அடிமை கீதத்தை இனிமையாயப்; பாடுகின்றன.
No comments:
Post a Comment