Wednesday, 23 March 2016

ஒப்பனை

ஒப்பனைகளின் உதிரஒலி
எலும்புதிசுகளுக்குள்
நிகழ்தவையாய் உருவெடுத்தன
வேலாயிக்கிழவியின் நிலத்தில்.
மோகம் களைந்து
அதிகாரக்குறியைஅறுக்க
சூன்யமாயிருந்த வெம்மை நாவு நீண்டது.
தெருமுச்சந்தியிலிருந்து
உதிரும் மயிர்களாய்
அருகாமையற்ற இடத்திற்கு விரட்டப்பட்டனர்
கடவுளர்கள்.
வேலாயிக்கிழவியின் உடுக்கையொலி அதிர
மிரழ்ந்து ஓடுகின்றன
பார்வதியும் சிவனும்.

No comments:

Post a Comment