Wednesday, 23 March 2016

பூனைமுகம்

பூனைமுகம் கொண்டு
பிரவாகம் எடுக்கிறது
கருநாகமொன்று.
கருமை கவ்விய இரவில்
மின்மினிப்பூச்சியின் ஒளியில்
எல்லாப்பூச்சிகள+ம் தனக்கான இரையைத் தேடிக்கொள்கின்றன.
கருநாகம் மட்டும் வெளிச்சத்தையே உண்கிறது
இரவை உண்பதற்கு
எந்தப்பூச்சியும்முன்வருவதில்லை.

அங்குமங்கும் அழைந்து திரியும்
குழந்தையின் தளிர் நடைக்கு
பயந்து திரியும்.
நகுலனின் குளிர் உறைந்திருக்கும்
வீட்டில்
பூனையின் உலகம்
எழுத்தாக உயிர் பெறும்.
பூனை தன்னை மறந்த நிலையில்
அடைகாத்து நிற்கிறது
வெறுமை.

No comments:

Post a Comment