Wednesday, 23 March 2016

என்பா

கருவில் உருக்கொள்ளும் பொழுது
கனவில் உலவினாய்.
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்
நிசப்தமொழியே.
ஒளிகளால் படம்பிடித்து
புள்ளிகளாய் காட்சிப்படும்
பால் அறியாசொல்லே.
மண்ணில் கால்பதிக்கஎத்தனிக்கும் வேளைக்காக
மகிழ்வைமடிநிறையசுமக்கிறாள்
உன் பிரியஅன்னை.
ஆசை முத்தங்களைஅள்ளித்தர
நீ இருக்கும் தாய்க்குடிலில்
சுவாசம் கொள்கிறான்
உன் பிரியதந்தை.
சிறகுகள் முளைத்துப்
பறக்கும் பட்சியாய்
மனதில் பறந்தாய்-நீ.
வெண்பாவில் தவழாத
கவிதைக்குழந்தைக்குப்பெயர்
வெண்பாஎன்றிட ஆசை.

No comments:

Post a Comment